நண்பர்களுக்கு சிறப்பு விருந்து...டின்னருக்கு மட்டும் ரூ.49 லட்சம் செலவு செய்த பிரபல ஹீரோ!
 

 
1
'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதுபிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தனது நண்பர்களுக்கு ஜானி டெப், பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தி இருக்கிறார்.

இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் உள்ள ‘வாரணாசி’ என்ற இந்திய உணவகத்திற்கு, நண்பர்கள் 20 பேருடன் ஜானி டெப் சென்றார் .
அவர்களுக்கு ஷிஷ் கெபாப்ஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா மசாலா, லேம்ப்கராஹி, பட்டர் சிக்கன், இறால் என விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்துக்காக, இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சத்தை ஜாலியாக செலவு செய்துள்ளார் ஜானிடெப்.

From Around the web