இவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு சிம்பிள் ஆக... சீயான் விக்ரம் செயலால் வியந்து போன ரசிகர்கள்..!
Sep 13, 2022, 07:05 IST

எப்போதும் ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விக்ரமின் தற்போதைய செயல் மேலும் அவர் மீதுள்ள மரியாதையையும், அன்பையும் அதிகரித்துள்ளது.
சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன்.அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் - வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியுள்ளார்.