பிரபல சீரியலுக்கு எண்ட் கார்டு போடும் சன் டிவி..!! 

 
1

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வரிசையில் மெட்டிஒலி, சித்தி,கோலங்கள்,தென்றல், திருமதிசெல்வம் தொடங்கி கயல், ரோஜா, சுந்தரி,வானத்தை போல என இன்று வரை லிஸ்ட்டின் நீளம் சற்று அதிகம்தான். ரசிகர்களின் ஆதரவோடு சில சீரியல்கள் 1000, 2000 எப்பிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.அப்படியிருக்க சீரியல் ரசிகர்களுக்கு சற்று வருத்தமான செய்தி ஒன்று வந்துள்ளது.

சன் டிவி டி ஆர்பியிலும்,மக்கள் மனதிலும் டாப்பில் இருக்கும் சீரியல் தான் ரோஜா,இந்த சீரியல் 2018 –ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன், வடிவுக்கரசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இந்த சீரியல் தற்பொழுது  பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது, அந்த வகையில் ரோஜா சீரியல் இந்த வருட இறுதிக்குள் முடிவடையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இந்த சீரியல்  1200 எப்பிசோடுகளைக் கடந்து மக்களின் பெருவாரியான ஆதரவோடு ஒளிபரப்பாகிவரும் சூழலில் எந்தக்காரணத்திற்காக சீரியல் நிறுத்தபடுகிறது என்கின்ற விவரம் வெளியாகவில்லை.

From Around the web