பிளாக்பஸ்டர் படங்களை பொங்கலுக்கு திரையிடும் சன் டிவி..?

 
1

மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பாக உருவான  திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் படமாக உருவாகி வெளியானது.  கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்தது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.  

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இரு பாகங்களாக உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

1

அதே போல் பொங்கல் பண்டிகைக்கு திருச்சிற்றம்பலம் படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறதாம். யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர்  இயக்கத்தில் தனுஷ் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார். நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் இந்தப் படத்தின் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்..இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தனர்.

இரண்டு மிக பெரிய படங்கள் டிவியில் ஒளிபரப்பாகிறதால் மக்கள் சந்தோசத்தில் உள்ளனர் 

From Around the web