சன்னி லியோன் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகும் படத்தின் டீஸர் வெளியீடு..!! 

 
1

பிரபல காமெடி நடிகரான சதிஷ், தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’.  பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். அந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சதிஷுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார்.  இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜீஷ் அசோக் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  ஹாரர் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். 

1

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் டீஸர் வெளியானது 

From Around the web