சூப்பர் நியூஸ்..!! நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்..? டி.ராஜேந்தர் கொடுத்த அப்டேட் 

 
1

நடிகர் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலுக்கு வருகை புரிந்த டி.ராஜேந்தர் தனது மகன் சிம்புவின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை  சந்தித்த டி.ராஜேந்தர், "நான் மறுபிறவி எடுத்துள்ளேன். கடந்த முறை பீப் பாடல் பிரச்சனையின்போது இங்கு வந்து தனது குறைகளை வழக்கறுத்தீஸ்வரரிடம்  கோரிக்கையாக வைத்த  நிலையில், சுமுகமாக பிரச்சனை தீர்ந்தது. 

எனக்கு, எனது மனைவிக்கு பிடித்த பெண் என்பதை தவிர்த்து எனது மகன் சிலம்பரசனுக்கு பிடித்த திருமகளை, குலமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுத்தீஸ்வரிடமே விட்டு அது குறித்த கோரிக்கையை வைத்துள்ளேன். இந்த கோரிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார். 

இதேபோல் சிலம்பரசன் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளங்கள்  அனைவரும் ஆதரவுடன் விரைவில் நடக்கும்  எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார்.

From Around the web