நாச்சிக்குப்பத்தில் அப்பா அம்மாவுக்கு சிலை வைத்த சூப்பர் ஸ்டார்..!!

 
1

 1975-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.அதனைத் தொடர்ந்து கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’ படத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Rajini

இந்நிலையில், ரஜினி கடந்த 2008-ம் ஆண்டில் ராகேவேந்திரா மண்டபத்தில் வைத்து ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகர் ஒருவர் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் சொந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று கேட்டிருந்தார். உடனடியாக கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்று அந்த ரசிகரை தனது வீட்டிற்கு வரவைத்தார்.

அவரிடம் நாச்சிக்குப்பத்தின் தற்போதைய நிலவரத்தை கேட்டுத் தெரிந்துகொண்டதோடு, கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகுப் பார்த்தார். பின்னர் தன்னுடைய அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ் பிறந்த வீட்டின் தற்போதைய சூழலை தனது அண்ணன் சத்யநாராயணாவை அனுப்பி பார்க்க வைத்தார். ரஜினியின் பூர்வீக வீட்டில் இப்போது ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் பூர்விக வீட்டருகே இருந்த அவரது தோட்டத்தில், தண்ணீர் தொட்டியை அமைத்து கிராம மக்களின் விவசாயத்துக்கு பயன்படும்படி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளாராம். அதோடு தனது ரசிகர் கார்த்திகேயனிடமே அந்த இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ரஜினி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக அந்த இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்துள்ளன.

Rajini

இதனையடுத்து தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சிறிய மேடை அமைத்து அதன் மீது ஒரு பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது ரஜினியின் அம்மா ரமாபாய், அப்பா ராமோஜி ராவ் இருவருக்கும் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் அமைக்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதனை பார்வையிட ரஜினி அங்கு செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

1

From Around the web