இன்று ஒரே மேடையில் பங்கேற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்..!! 

 
1

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். வரும் செப்டம்பர் 30-ம் தேதி அன்று இதன் முதல் பாகம் வெளியாக உள்ளது.

PS1

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை வெளியிட உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ‘பொன்னி நதி’ மற்றும் ‘சோழா சோழா’ என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகியவை இன்று  சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 


 

From Around the web