திருப்பதி கோயிலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!!
Dec 15, 2022, 06:05 IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று திருப்பதி வந்தார். திருமலையில் தேவஸ்தான துணைச் செயல் அதிகாரி ஹரிந்திரநாத் அவரை வரவேற்று திருமலையில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார். தேவஸ்தானம் சார்பில் ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இன்று விஐபி தரிசனத்தில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.