மீண்டும் தாத்தாவான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!! 

 
1

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இளைய மகள் சவுந்தரயாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

Rajini

சவுந்தர்யா, தனது முதல் கணவன் அஸ்வினுடன் விவாகரத்து பெற்றபின், தொழிலதிபர் விசாகனை மறுமணம் செய்து கொண்டார். அஸ்வின் - சவுந்தர்யாவின் மகனான வேத், சவுந்தர்யாவிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில், விசாகன் - சவுந்தர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அபரிமிதமான கடவுள் அருளுடனும், எங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடனும், விசாகன், வேத் மற்றும் நான் வேதின் தம்பியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். செப்.,11ம் தேதி, வீர் ரஜினிகாந்த வணங்காமுடி பிறந்தார். டாக்டர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது 4வதாக பேரன் பிறந்துள்ளதை குறிப்பிட்டும், ரஜினிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web