காந்தாரா படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு..!!

 
1

நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து தயாரித்த காந்தாரா திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியாகி கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா திரைப் படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்ததால், காந்தாரா திரைப்படத்தை மற்ற இந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டது.

இதனடிப்படையில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மெதுவாக பயணத்தை தொடங்கிய காந்தாரா தற்போது வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பு காந்தாரா திரைப்படம் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தெரிந்ததை விட தெரியாதது அதிகம், என்பதை சினிமாவில் இதை விட யாரும் சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. இப்படம் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பு. காந்தாரா படத்தை எழுதி இயக்கி, நடித்த அசத்தியுள்ள ரிஷப் ஷெட்டிக்கு எனது பாராட்டுகள். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். 

From Around the web