இசை புயல் ஏ.ஆர்.ரகுமானை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!! எதற்காக தெரியுமா ?

 
1

கோலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனது புதுமையான இசையால் அனைவரையும் ஈர்த்து வைத்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை பல நூறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் அது அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனவை.

இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர்.அதன்படி இவர் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் 99 சாங்ஸ் அது அந்த அளவு வரவேற்பை பெற விட்டாலும் பேசப்பட்டது.கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருந்தார்  ஏ.ஆர்.ரகுமான்.

இதையடுத்து லீமஸ்க்  (LEmusk) என்கிற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.இப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் VR என்கிற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கபட்டு உள்ளது. இதன் மூலம் படம் பார்க்கும் பார்வையாளர்கள் புதுவித அனுபவத்தை உணர முடியும்.

இவ்வாறு அதிநவீன தொழிநுட்பத்தில் உருவாகி உள்ள இப்படத்தை முதன்முதலில் கேன்ஸ் திரைப்படம் விழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார் ரகுமான். இதனை ரஜினியிடம்  போட்டு காண்பித்து அவரிடம் பாராட்டை பெற்றுள்ளார்.


 

From Around the web