மனைவி பெயரில் ஓட்டல் தொழிலில் ஈடுபட இருக்கும் சூப்பர்ஸ்டார்..!!

 
1

அதிக சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. 

மகேஷ்பாபு சினிமாவில் நடிப்தோடு இல்லாமல், விளம்பர படங்களில் நடிக்கிறார்.தொழில் அதிபராகவும் வளர்ந்து வருகிறார். ஏற்கனவே சொந்தமாக சொகுசு தியேட்டர்கள் கட்டி திறந்துள்ளார்.தற்போது இன்னொரு புதிய தொழிலில் அடியெடுத்து வைக்கிறார். அவர் மனைவி நம்ரதா பெயரில் ஓட்டல் தொழிலில் ஈடுபட இருக்கிறார்.

முதல் கட்டமாக ஐதராபாத்தில் நவீன வசதிகளுடன் 2 நட்சத்திர ஓட்டல்கள் கட்ட இருக்கிறார். அதில் ஒன்று பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைய இருக்கிறது.தொடர்ந்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஒட்டல்கள் கட்டி தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார்.

 

From Around the web