சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிறந்தநாளான இன்று 150வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!
Jul 14, 2022, 14:20 IST

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். தற்போது சரத்குமார் தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். எட்டுத் தோட்டாக்கள், மெமரீஸ் ஆகிய படங்களை இயக்கிய ஷ்யாம் பிரவீன் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ‘தி ஸ்மைல் மேன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரெளடி பேபி புகழ் பேபி ஆழியா, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அம்னீஷியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இன்று சரத்குமாரின் பிறந்தநாள். எனவே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.