சூர்யா ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறைய வைக்கும் தகவல் !

 
1

பாலாவின் ‘வணங்கான்’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். சூர்யாவின் 42வது படமாக உருவாகும் இப்படத்தை  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

இரு பாகங்களாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மொத்தம் 10 மொழிகளில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படம் முழுக்க முழுக்க 3டி டெக்னாலஜியில் உருவாகிறது.

இதையொட்டி இப்படத்தின் தாறுமாறான மோஷன் போஸ்டர் வெளியானது. இதில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என 5 கதாபாத்திரங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

1

இந்நிலையில் இந்த 5 கதாபாத்திரங்களிலும் சூர்யாவே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் சூர்யா இரு கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துள்ள நிலையில் முதன்முறையாக 5 வேடங்களில் நடிப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது. 

From Around the web