9 பிரிவுகளில் 10 விருதுகளை கைபற்றிய தமிழ் சினிமா!!

 
1

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தேசிய விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக சிறந்தப் படம், நடிகர், நடிகை, இயக்கம் என பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன.

NFA

அந்த வகையில் 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. பிரஸ் இன்பர்மேஷன் ப்ரூவின் யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் இது ஒளிபரப்பானது.

இந்த ஆண்டு, 30 மொழிகளில் 305 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன. சிறப்பு திரைப்படம் அல்லாத பிரிவில், 28 மொழிகளில் 148 படங்கள் பெறப்பட்டன. அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர 15 மொழிகளில் உள்ள திரைப்படங்கள் உள்ளீடுகளாக பெறப்பட்டன. 24 புத்தகங்கள் மற்றும் 5 திரைப்பட விமர்சகர்கள் சினிமா விருதுகளில் சிறந்த எழுத்துக்காக போட்டியிட்டனர்.

NFA

சிறந்த படம் - சூரரைப் போற்று

சிறந்த திரைக்கதை - சூரரைப் போற்று

சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (சூரரைப் போற்று)

சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன்னே அஷ்வின் (மண்டேலா)

NFA

இயக்குநர் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருதும், சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.

From Around the web