வெளியானது நயன்தாரா படத்தின் டீஸர்..!! 

 
1

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தாலும் அதிகபட்சமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் கூட நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த O2 திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது 

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் டிசம்பர் மாதம் 22 ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் வினய் நடித்துள்ளார்.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய “ரவுடி பிக்சர்ஸ்” நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். அஷ்வின் சரவணன் இந்த படத்தை திரில்லர் ஜர்னரில் இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடிகை நயன்தாரா நடித்த மாயா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது 

From Around the web