வெளியானது ‘பதான்’ படத்தின் டீசர்..!

 
1

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாரூக்கான் நேற்று (நவ., 2) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதை முன்னிட்டு அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள ‘பதான்’ இந்திப் படத்தின் டீசர் வெளியானது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

SRK

ஷாரூக் கதாநாயகனாக நடித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவர உள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது அவருடைய ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளன. அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் டீசர் அதிரடி ஆக்ஷனாக உள்ளது. சில காட்சிகளைப் பார்க்கும் போது ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலவும் இருக்கிறது.

டீசருக்கு பாலிவுட் பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். டீசர் வெளியான குறைந்த நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.

ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு பதான் படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படம் குறித்து ஏதாவது அப்டேட் வருமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web