27 முறை குத்தி இருக்கான் சார் - மிரட்டலாக வெளியான “ரத்தம்” படத்தின் டீசர்..!!
Tue, 6 Dec 2022

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் ‘ரத்தம்’. இந்த படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் என மூன்று நடிகைகள் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை இன்ஃபினிடி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.ஒரு மரணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த டீசரில் படத்தின் கதையம்சத்தை முன்னணி இயக்குனர்களாக வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோர் கூறுகின்றனர்.