கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா பட டீசர் வெளியீடு..!!
Jul 30, 2022, 08:05 IST

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மகத் நடித்துள்ள கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுளது. இயக்குனர் பிரபு ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா தட்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரன் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடிய மஹத் ராகவேந்திரா அடுத்ததாக பாலிவுட்டில் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரைஷி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தின் டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…