6 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகியுள்ள லாஸ்ட் 6 ஹவர்ஸ் படத்தின் டீசர் வெளியீடு..!! 

 
1

ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுனில்குமார் இயக்கத்தில் பரத் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள திரைப்படம் 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் ஆறு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகி உள்ளது.

வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் நான்கு பேர் ஒரு திருட்டின் மூலம் வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படமாக உருவாகியுள்ளது. 

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

From Around the web