மிரட்டலான ‘டிமான்டி காலனி 2’ மோஷன் போஸ்டர் வெளியீடு..!!

 
1

7 ஆண்டுகளுக்கு முன்  வெளியான 'டிமான்டி காலனி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி தற்போது ‘டிமாண்டி காலணி2’ படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிக அளவில் அதிகமாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக, ‘இருள் ஆளப்போகிறது’ என்ற போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதில் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த போஸ்டர்களில் QR கோட் இருக்கிறது. இதை ஸ்கேன் செய்வதன் மூலம் படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் பார்க்கலாம். இது போன்ற புது யுக்திகள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

1

அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. படத்தின் வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் & படத்தின் தயாரிப்பாளரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான மோஷன் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

From Around the web