பட்டயக் கிளப்பும் வரிகளுடன் வெளியான துணிவு பட பாடல்..!!

 
1

அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் சாதாரண நாட்களில் வெளியானலே அதை திருவிழா போல அவர்களது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். தற்போது, பொங்கல் பண்டிகைக்கு இரண்டு படங்களுமே ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளால் எதிர்ப்பார்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்-வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.தமிழகம் முழவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படம் வெளியாக வாய்ப்பு உள்ளது.இதேபோல, விஜய் நடித்த வாரிசு படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்றே கூறலாம்.அந்தப் படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. பாடலும், சிம்பு பாடிய தீ.. தளபதி.. என்ற பாடலும் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தநிலையில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா.. பாடல் இன்று வெளியாகியது.சில்லா. சில்லா.. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது.
 

அனிருத் குரலில்,

இருப்பது ஒரு லைப்..

அடிச்சிக்க சியர்ஸ்.. போனதெல்லாம் போகட்டும்.

தேவை இல்லை தியர்ஸ் (கண்ணீர்).என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

மேலும், புடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்..

தினம் தினம் முக்கியம்பா நம்ம இன்னர் பீஸ்.. என்ற வரிகளையும்,

என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு..

மனசுல போராட துணிவு இருக்கு..

சுத்தி பாரு சந்தோசம் தான் கொட்டிக் கிடக்கு..

வந்திருச்சி நம்ம காலம் ஏறி கலக்கு..

என பாடல் வரிகள் பட்டயக் கிளப்பும் வகையில் இருப்பதாகவும், ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா.. பாடல் தீயாக இருப்பதாகவும் அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

From Around the web