காமெடி நடிகர் யோகிபாபுவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த தளபதி விஜய்..!! 

 
1

தமிழ் திரையுலகில் நகைக்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. 2009-ல் வெளியான ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, பையா, மான் கராத்தே, காக்கி சட்டை, மெர்சல், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

1

தற்போது வாரிசு, ஜவான், ஜெய்லர் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வரும் யோகிபாபு, கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் கிரிக்கெட் திறமையை கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பேட்டை கையில் பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்து விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த பேட்டை எனக்கு சர்ப்ரைஸாக கொடுத்த விஜய் அண்ணாவிற்கு நன்றி’ என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பேட்டில் விலையையும் தேடி பிடித்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி அந்த பேட்டின் விலை ரூ.10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


 

From Around the web