2026 அரசியலில் தளபதி விஜய்..? கவனத்தை ஈர்த்த போஸ்டர் 

 
1

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.காஞ்சிபுரத்தில் உள்ள 10 திரையரங்குகளில் வாரிசு படம் திரையிடப்பட உள்ள நிலையில் விஜய் ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்கத்தினரும் போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்துள்ளனர் 

1

அந்தவகையில் காஞ்சிபுரம் பாபு திரையரங்கு வளாகத்தில் பிரம்மாண்டமாக 50 அடி அகலமும் 20 அடி உயரமும் கொண்ட  பிளக்ஸ் பேனர் வாரிசு படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. வாரிசு திரைப்படத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில், “நீங்கள அமர்ந்தால் நாற்காலியும் தோரணையாக, அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சியாக 2026...?” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சூசகமாக குறிப்பிட்டு வாசகம் அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இடத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

From Around the web