தளபதி ரசிகர்களே ரெடியா..!! நேரு உள்விளையாட்டு அரங்கில் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா..!!
 Nov 11, 2022, 13:06 IST
                                        
                                    
                                
                                    
                                இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார்.படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது
இந்நிலையில் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
  
 - cini express.jpg)