தளபதியின் 'வாரிசு' இசை வெளியீட்டால் தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்..!!

 
1

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 5 ஆயிரம் ரசிகர்களுக்கு அழைப்பு பாஸ் அனுப்பட்டிருந்தது. பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்த சூழலிலும், நேரு உள்விளையாட்டு அரங்கின் வாயில்கள் திறக்கும்போது, ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு உள்ளே சென்றதால், ரசிகர்களும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Seats damaged at Varis music launch party….! Penalty for production  company…? – Daily Telegraph - time.news - Time News

இந்நிலையில் 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்ததாக புகார் எழுந்துள்ளது. சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க படும் என நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

From Around the web