சாக்லேட் பாய் நடிகருக்கு இன்று திருமணம்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு!!

 
1

சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண்.அந்தப் படத்தில் தான் நடிகை அமலா பாலும் ஹீரோயினாக அறிமுகமானார். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் தான் ஹரிஷ் கல்யாண்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மேலும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கினார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் ஒன்றில் மூன்றாம் இடத்தை பிடித்தவர் ஹரிஷ் கல்யாண்.பொறியாளன், வில் அம்பு, பியார் ப்ரேமா காதல் உள்ளிட்ட சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

1

ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற பெயரில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் அதுல்யா ரவி ஹீரோயினாக நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் ஹரிஸ் கல்யாண் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு, அதில், “அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, எந்த வித நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.

1

இப்போது, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதை எழுதுகின்றேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திருமணம் குறித்து அறிவித்துள்ளார். இது இருவீட்டார் நிச்சயம் செய்த திருமணம் என்று கூறியுள்ள ஹரிஷ் கல்யாண், சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் மஹாலில் காலை 9-10.30 மணியளவில் திருமணம் நடைபெறும் என்று ஹரிஷ் கல்யாண் அறிவித்துள்ளார்.

From Around the web