விரைவில் வெளியாக இருக்கிறது  `தி கிரேட் இந்தியன் கிச்சன்'..!!

 
1

ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்த்ரன் நடித்துள்ள படம் `தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இது 2021ல் ஜோ பேபி இயக்கி மலையாளத்தில் வெளியான கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்.

பெண் அடிமைத்தனத்தை பற்றியும், சமூகம் பெண்களுக்கு கொடுக்கும் அழுத்தம் பற்றியும் பேசியிருந்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகிவரும் நிலையில், தற்போது படத்தின் தணிக்கை முடிந்து `யு/ஏ' சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

From Around the web