'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

 
1

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குனர் ஜியோ பேபி இயக்கியிருந்த இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்ற அதே பெயரில் தயாராகி வருகிறது. இந்த தமிழ் ரீமேக்கை இயக்குனர் ஆர். கண்ணன் இயக்குகிறார். 

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.  கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

சமீபத்தில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் வருகிற டிசம்பர் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


 

From Around the web