வெளியானது ரசிகர்கள் எதிர்பார்த்த மல்லிப்பூ பாடல்... !! 

 
1

சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. ஒரு சாதாரண மனிதன் பிழைப்பிற்காக வெளியூர் சென்று காலத்தின் சூழ்நிலையால் எவ்வாறு கேங்ஸ்டராக மாறுகிறார் என்பது தான் இப்படத்தின் கதை. கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும்  சூப்பர் ஹிட்டடித்துள்ளது. அதில் மல்லிகைப்பூ பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அதை பூர்த்தி செய்யும் விதமாக தற்போது அந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

ஏக்கத்தை பதிவு செய்யும் பாடலாக உருவாகி இப்பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் தாமரையின் வரிகளில் பல ரசிகர்களின் இதயத்தை இந்த பாடல் தொட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.

From Around the web