நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் ‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர்..!

 
1

தமிழில் பல நூறு விளம்பரங்களை இயக்கிய பிரபல இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ளனர்.விளம்பரங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் படத்தின் மூலம் நடிகராக மாறுகிறார்.

இப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் 2 நாட்களுக்குள் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது.


 

From Around the web