இணையத்தை தெறிக்கவிடும் 'மைக்கேல்' டிரெய்லர் !

 
1

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை செளத்ரி தயாரித்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.‌

இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாகவும் மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ‌‌‌‌‌‌இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க இந்த டிரெய்லர் உருவாகியுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

From Around the web