ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் லவ் டுடே படத்திலிருந்து வெளியான அட்டகாசமான ஸ்னீக் பீக்..!!

 
1

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.  இந்தப் படத்தின் மூலம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

லவ் டுடே என்றால் விஜய் படம் போன்று  தெய்வீக காதல் இல்லை. அதற்கு மாறாக தற்கால காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அஜித் காலிக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

பக்கா என்டர்டைன்மென்ட் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள லவ் டுடே திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்திலிருந்து தற்போது புதிய ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

From Around the web