உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நடிகர்!! சோகத்தில் தெலுங்கு ரசிகர்கள்!

 
1

ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தெலுங்கு தேசம் கட்சி மேற்கொண்டு வருகிறது.

nandamuri-taraka-ratna

இதன் ஒருபகுதியாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷ் ‘யுவ களம்’ என்ற பெயரில் ஆந்திராவில் பேரணி நடத்தி வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பேரணியில் ஜூனியர் என்டிஆரின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா கலந்து கொண்டார்.

அப்போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த அவரை உடனடியாக ஆந்திர பிரதேசத்தில் உள்ள குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையின் அறிக்கை நேற்று வெளியாகியது.


 

அதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடிவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ஜுனியர் என்டிஆர் விரைவில் மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

நந்தமுரி தாரக ரத்னா தெலுங்கில் வில்லன் வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துவருகிறார். அவர் நடிப்பில தற்போது சாரதி என்ற படம் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web