வெடி படத்தில் நடித்த நாயகிக்கு அரியவகை நோய்..? 

 
1

நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி,  அச்சாரம் உட்பட படங்களில் நடித்தவர் நடிகை பூனம் கவுர். தெலுங்கு நடிகையான இவர் மலையாள மொழிகளிலும் நடித்துள்ளார். திறமையான நடிகையாக இருந்தாலும், அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை.

இந்நிலையில், நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இது "பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்" ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும். இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.  இந்த ஃபைப்ரோமியால்ஜியா ஒருவருக்கு வந்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

1

பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தெலுங்கு மாநிலங்களில் சமூக செயல்பாட்டாளராக வலம் வரும் பூனம், கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதத்தில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  

From Around the web