பிரபல நடிகையின் அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை..!! என்ன நடந்தது தெரியுமா ?

 
1

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த கன்னட நடிகை சுவாதி சதீஷ், 'எஃப் ஐ ஆர்', '6 டு 6' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 3 வாரத்திற்கு முன் பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஹென்னூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Swati

அங்கு அவருக்கு ரூட் கெனல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்தபின் முகம் திடீரென வீங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த சுவாதி, இந்த வீக்கம் எப்போது குறையும் என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் வீக்கம் குறையும் என்று மருத்துவர் கூறியுள்ளார். 

ஆனால், 3 வாரமாகியும் வீக்கம் குறையவில்லை. தற்போது அவரை பார்ப்பவர்களுக்கு அவர் சுவாதி தானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு, முகத்தோற்றம் மாறியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை என்று கூறியுள்ள சுவாதி, தவறான சிகிச்சை மூலம் தனது முகத்தை சிதைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து நடிகை சுவாதி, வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

Swati

கடந்த மாதம் கன்னட நடிகை சேத்னா ராஜ் உடை எடை குறைப்பு சிகிச்சையின் போது திடீரென மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web