தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படத்தின் ஒளிப்பதிவாளர் மரணம்! பிரபலங்கள் இரங்கல்..!!

 
1
1970-ல் வெளியான ‘ஸ்டாப்’ படத்தின் மூலம் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஓவன் ராய்ஸ்மேன்.அதனைத் தொடர்ந்து ‘தி பிரஞ்சு கனெக்ஷன்’, ‘தி கேங் தட் கன்ட் ஷூட் ஸ்ட்ரெய்ட்’, ‘ப்ளே இட் அகைன், சாம்’, ‘தி ஹார்ட்பிரேக் கிட்’, ‘தி எக்ஸார்சஸ்ட்’, ‘த்ரீ டேஸ் ஆஃப் தி காண்டோர்’, ‘நெட்வொர்க்’ உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

தி ப்ரெஞ்ச் கனெக்ஷன் படம் கடந்த 1971-ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் கார் சேஸிங் காட்சிகளில் மட்டுமில்லாமல் படம் முழுமையிலும் இவரது ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்தது. நியூயார்க்கின் குறுகலான வீதிகளில் இவர் எடுத்த பல காட்சிகள் ரசிகர்களை கட்டிப் போட்டவை.

owen roizman

தன்னுடைய தி பிரெஞ்ச் கனெக்ஷன்ஸ், தி எக்ஸார்சிஸ்ட், நெட்வொர்க், டூட்சி, வியாட் யார்ப் போன்ற படங்களுக்காக 5 முறை ஆஸ்கார் விருதுகளுக்காக ராய்ஸ்மேன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2017ம் ஆண்டில் தன்னுடைய ஒளிப்பதிவாளர் பணிக்காக இவருக்கு கௌரவ விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் கடந்த 1997-ம் ஆண்டில் இவர் தட்டிச் சென்றுள்ளார். பிரபல ஹாலிவுட் இயக்குநர் சிட்னி பொல்லாக்குடன் 5 படங்களில் ஓவன் ராய்ஸ்மேன் பணியாற்றியுள்ளார். த்ரீ டேஸ் ஆப் தி கான்டர், தி எலெக்ட்ரிக் ஹார்ஸ்மேன், ஆப்சென்ஸ் ஆப் மலைஸ் மற்றும் ஹவானா போன்ற படங்களில் இவர்கள் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

RIP

இந்த நிலையில், ரோயிஸ்மேன் தனது மனைவி மோனாவுடன் லாஸ் ஏஞ்சல்ஸின் என்சினோ பகுதியில் வசித்து வந்தார். வயது முதிரவு காரணமாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 6-ம் தேதி காலமானார். இவருக்கு எரிக் என்ற மகன் உள்ளார். ரோயிஸ்மேன் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

From Around the web