காதல் வலையில் சிக்கிய பிரபல “பீஸ்ட்” பட நடிகை…!

 
1

 2012 ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவா ஜோடியாக “சக்தி” என்ற கேரக்டரில் நடித்தார் பூஜா ஹெக்டே. ஒல்லியான தேகம், நல்ல உயரம் என முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார் பூஜா ஹெக்டே. அப்படம் பிளாப் ஆனதால் டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார்.

முகமூடி படத்தின் தோல்விக்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

“மொஹஞ்சதாரோ”என்ற பாலிவுட் படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாகவும் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. டோலிவுட்டில் தொடர்ச்சியாக நடித்து வந்த பூஜா ஹெக்டேவுக்கு கடைசியாக அல்லு அர்ஜுனுடன் நடித்த “ஆலா வைகுந்தபுரம்லு” படம் மட்டுமே சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பின்னர் பிரபாசுடன் நடித்த “ராதே ஷ்யாம்” தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த “பீஸ்ட்” தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த “ஆச்சர்யா”ஆகிய படங்களில் நடித்தார் தற்போது இந்தியில் ரன்வீர் சிங் உடன் “சர்க்கஸ்” என்ற படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

Is Salman Khan really dating Pooja Hegde? | Hindi Movie News - Times of  India

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “வீரம்” படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

இதுதவிர சல்மான் கான் தயாரிப்பில் மேலும் இரண்டு இந்தி படங்களிலும் நடிக்க பூஜா ஹெக்டே கமிட் ஆகி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து பூஜா ஹெக்டேவுக்கு சல்மான் கான் வாய்ப்பு அளிப்பதற்கு காரணம் அவர்மீது ஏற்பட்ட காதல் தான் என பாலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

பாலிவுட் திரையுலகில் 56 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருப்பவர் சல்மான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சல்மான் கானுக்கு 56 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருந்தாலும், இவருடன் காதல் சர்ச்சையில் சிக்காத பாலிவுட் நடிகைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு “ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனா கைஃப்” வரை., தமிழில் இருந்து சென்ற அசின் வரை சல்மான் கானின் காதல் லிஸ்ட்டில் பல நடிகைகள் இடம்பெற் றுள்ளனர். தற்போது அந்த பட்டியலில் பூஜா ஹெக்டேயும் இடம்பெற்று உள்ளார்.

Why Pooja Hegde Is "Nervous" About Working With Salman Khan In Kabhi Eid  Kabhi Diwali

அடிக்கடி ஜோடியை மாற்றும் சல்மான் கான், இந்தமுறை பூஜா ஹெக்டேவை பிடித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சல்மான்கான், பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து இதுவரை அவர்களின் காதல் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

From Around the web