பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்துள்ள பிரபல நடிகை..!!

 
1

நாளை வெளியாக இருக்கும் நடிகர் பார்த்திபனின்இரவின் நிழலில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் பிரிகிடா. ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் 'பவி டீச்சர்' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மிகவும் அடக்கம் ஒடுக்கமாக இருக்கும் பவி டீச்சர் இந்த படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பவி டீச்சராக நடித்த பிரிகிடாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உள்ளனர். பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய சென்ற இவருக்கு ஹீரோயின் ரோலையே வழங்கி இருக்கிறார் பார்த்திபன்.

1

இந்தப்படத்தில் 19 நொடிகளில் ஓடிக் கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல், இன்டிமேட் காட்சிகளில் நடித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரிகிடா.'இரவின் நிழல்' படத்தில் நிர்வாணமாக நடித்தது குறித்து கேட்கப்பட்ட போது, சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பல முறை சரி செய்யும் பெண் தான் நான். ஆனால், அந்த கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானது. அதற்கு அப்படியொரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரிய வைத்தார். படத்தில் அந்த காட்சி நிச்சயம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும், அது கவர்ச்சியாக இருக்காது. அங்கே புனிதம் மட்டுமே தெரியும். இந்த படம் எனக்கு இத்தனை சீக்கிரம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளார் நடிகை பிரிகிடா.

1

இரவின் நிழல் படத்திற்கு  ஏற்கனவே சர்வதேச விருதுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் மிகப்பெரும் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
 

From Around the web