மீண்டும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கும் பிரபல நடிகை..!! 

 
1

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படத்தில் ஆரம்பம் முதலே சிக்கல் நிலவி வந்தது. பின்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து படம் அப்படியே முடங்கிப்போனது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவுபெற்றிருந்தது. 

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகளுக்காக நடிகர் கமல் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு மூன்று வாரங்கள் படத்தின் பணிகளில் ஈடுபடும் கமல், பின்னர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

1

இந்நிலையில் காஜல் அகர்வால் மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாவில் லைவ் வந்த காஜல் செப்டம்பர் 13-ம் தேதி முதல் படப்பிடிப்பில் இணைய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

From Around the web