உலக நாயகன் படத்தில் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை..?

 
1

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவை கலக்கிய திரைப்படம் இந்தியன். அதையடுத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

அந்தப் படம் தொடங்கியது முதலே பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்தியன் 2 படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.இதையடுத்து நீண்ட மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியுள்ளது.இரண்டு ஆண்டுகளாய் நின்று போன படம் மீண்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.இதில் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்கிறார்.

1

இதனை யோக்ராஜ் சிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், "கேமராவுக்குப் பின்னால் இருக்கும் எல்லா ஹீரோக்களின் மேலும் பெரிய மரியாதை உள்ளது. என்னை மேலும் அழகாக்கிய ஒப்பனையாளர்களுக்கு நன்றி. லெஜெண்ட் கமல்ஹாசனுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

யோக்ராஜ் சிங் ஏற்கனவே பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார். ...அதேப்போன்று பஞ்சாப் மொழியிலும் நடித்துள்ளார். ...தமிழில் ரஜினியின் தர்பார் படத்தில் நடித்தார்....ரஜினியை தொடர்ந்து இப்போது கமல் உடனும் இணைந்துள்ளார்....
 

From Around the web