திரையுலகினர் அதிர்ச்சி! பிரபல இணை இயக்குனர் மரணம்!! 

 
1

‘ஸ்வாசமே’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் இணை இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் ராம்.கேரள மாநிலம் நென்மரா வல்லங்கி கிராமத்தை சேர்ந்த இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.   

Attack

மறைந்த நடிகர் கலாபவன் மணியுடன் இணைந்து பல ஆல்பங்களை சந்தோஷ் ராம் உருவாக்கியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் தயாராகி வரும் பெயர் குறிப்பிடாத படத்தின் படபிடிப்பு காட்சிகள் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் திடீரென  மயங்கி  விழுந்துள்ளார்.

RIP

உடனடியாக படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இவரின் மறைவு திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From Around the web