ஒடிடியில் வெளியான படம் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை..!! 

 
1

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி,லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா,தீனா, நக்கலைட்ஸ் தனம் மற்றும் பலர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அழகான காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம்.மேலும் இன்றைய சமூகத்தில் நம் தாய் தந்தையரிடம் நாம் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதை மனதில் பதியும் வண்ணம் கற்றுக்கொடுத்துள்ள படம்.

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.


 

From Around the web