நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயன் படத்தின் முதல் பாடல்..!!

 
1

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்து வரும் படம் பிரின்ஸ். படம் முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

1

From Around the web