பீஸ்ட் பட நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட விமான ஊழியர்.!!

 
1

தமிழில் முகமூடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இப்படம் பிளாப் ஆனதால் கோலிவுட்டுக்கு டாடா காட்டிவிட்டு டோலிவுட் பக்கம் ஒதுங்கினார்

டோலிவுட்டில் அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார் பூஜா ஹெக்டே. இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற பூஜா ஹெக்டே அங்கு சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் கடைசியாக பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்திருப்பார்.பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதன் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அளவில் புகழ் தந்துள்ளது. 

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பூஜா, தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுவதாக இண்டிகோ விமானத்தை டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். 


 

From Around the web