உயிரிழந்த சீரியல் நடிகையின் கடைசி வீடியோ வைரல்..!!

 
1

மூன்று முடிச்சு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தக்கர்.இந்த சீரியலில் நடித்த பின்னர் மிக பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இவர் கடைசியாக ரக்‌ஷாபந்தன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.  இவர் தன்னுடைய கேரியருக்காக மும்பையில் தங்கி இருந்தார். கடந்த ஒரு ஆண்டாக இவர் மும்பையில் இருந்து காலி செய்துவிட்டு இந்தூரில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் திடீரென நடிகை வைஷாலி தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது .

இந்த நிலையில் அவர் வாழ்க்கை மிகமிக மதிப்பு வாய்ந்தது என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மஞ்சள் காமலை நோய்க்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனை படுக்கையில் இருந்து பேசும் வைசாலி, “ வாழ்க்கை மிகமிக மதிப்பு வாய்ந்தது நண்பர்களே.. நொறுக்கு தீனிகளை உண்பது, இரவில் அதிக நேரம் பார்ட்டி செய்வது, உறவில் ஏற்படும் சிக்கல்களுக்காக மது அருந்துவது போன்றவற்றை செய்து நேரத்தை வீணக்காடிதீர்கள்” என்று பேசியிருக்கிறார். வைசாலியின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர் அவர் இறந்து விட்டதை இப்போதும் நம்ப முடியவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்.

1

வைஷாலி தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, “ அவரது தொலைதொடர்பு சாதனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அவரது டைரியும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அவரது உறவினர் ராகுல், அவரை துன்புறுத்தி இருக்கிறார். அதனால்தான் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். வைஷாலி மற்றொருவரை கல்யாணம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அதையும் ராகுல் தடுத்து இருக்கிறார். ராகுல் தற்போது தலைமறை ஆகியிருக்கிறார் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.

From Around the web