வாரிசு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டும் சம்பளம் கிட்டத்தட்ட 120 கோடியாம் ?
தளபதியின் ‘வாரிசு’ படம் வரும் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது, படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலாக காத்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு களமிறங்குகிறது. இரண்டு படங்களுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைனில் டிக்கெட் ஒன்றின் விலை ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் ரசிகர்கள் முட்டி மோதி படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். ஹவுஸ்புல் காட்சிகளாக பொங்கலன்று துணிவு மற்றும் வாரிசு ஓட இருக்கிறது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் எவ்வளவு தொகையை சம்பளமாக பெற்றனர் எனற தகவல் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.
இவாரிசு படத்துக்கு விஜய்க்கு சுமார் 110 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது முந்தைய படத்தை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராஷ்மிகாவுக்கு 4 கோடி ரூபாயும், சரத்குமாருக்கு 2 கோடி, பிரகாஷ்ராஜ்க்கு 1.5 கோடி, ஷாமுக்கு 1 கோடி என சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு 35 லட்சம் இருக்கலாம் என்றும், குஷ்பூவுக்கு 40 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.