கேப்டன் கூல் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..!! 

 
1

மகேந்திர சிங் தோனி தற்போது அவர் தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் என்ற புதிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது. 

இந்த நிலையில் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.தோனியின் மனைவி சாக்ஷி தயாரிக்கும் இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார். படத்தின் கதாநாயகனாக பிக்பாஸ் மூலமாக பிரபலமாகி ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு போன்ற  சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தான் நடிக்கவுள்ளார், இவரோடு இணைந்து நடிகைகளான  இவானா, நதியா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார்கள். படத்திற்கு LGM என வைத்துள்ளனர், அதாவது LETS GET MARRIED என வைத்துள்ளனர். 


 

From Around the web