சிவகார்த்திகேயனின் 22  படத்தின் பெயர் இது தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!  

 
1

சிவகார்த்திகேயன் தற்போது  'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.  

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். மடோன் அஸ்வின் யோகி பாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22-வது படமாக உருவாகிறது. 

1

தற்போது இந்தப் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகிறது. 

From Around the web